பாராளுமன்றத்தில் ஒக்டோபர் மாதம் சிறப்பாக செயற்பட்ட 10 பாராளுமன்ற உறுப்பினர்களுள் மலையக எம்.பியொருவரும் இடம்பிடித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமாரே 7 ஆவது இடத்தில் உள்ளார்.
பாராளுமன்றம் வருகை, விவாதங்களில் பங்கேற்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டே manthri.lk என்ற இணையத்தால் குறித்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.
முதல் பத்து இடங்களை பிடித்த எம்.பிக்கள் விபரம் வருமாறு,
1.அநுரகுமார திஸாநாயக்க.
2.அஜித் நிவாட் கப்ரால்.
3.சஜித் பிரேமதாச.
4.ஹர்ஷ டி சில்வா.
5.மஹிந்தானந்த அளுத்கமகே
6.பந்துல குணவர்தன.
7.வேகுமார்.
8.புத்திக்க பத்திரண.
9.எஸ்.சேமசிங்க.
10.எஸ.எம். மரிக்கார்.