மலையக கோட்டையை குறிவைக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியின்,  கிராமிய மட்டத்திலான அரசியல் பொறிமுறையை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுவருகின்றது.

கட்சித்  தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம், தவிசாளர் வஜிர அபேவர்தனவின் வழிகாட்டலுடன் திட்டம் வகுக்கப்பட்டுவருகின்றதென என கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி புதிய தொகுதி அமைப்பாளர்களும், இணைப்பாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர். அத்துடன், மலையகத்திலிருந்து இளைஞர்களை உள்வாங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதான அரசியல் கோட்டைகளுள் மலையகமும் ஒன்று. எனினும், அக்கட்சி இரண்டாக பிளவுபட்டதன் பின்னர் பெரும்பாலானவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமித்தனர்.

இந்நிலையிலேயே மலையகத்தில் மீண்டும் காலூன்றுவதற்கான முயற்சியில் ஐக்கிய தேசியக்கட்சி இறங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, ஐக்கிய தேசியக்கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களின் களப் பயணமும் ஆரம்பமாகவுள்ளது.

Related Articles

Latest Articles