“தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிவரும் அரசாங்கமாகவே நாம் எமது இரண்டாவது மே தினத்தை அனுஷ்டிக்கின்றோம்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.
நுவரெலியாவில் நடைபெறும் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்புகளால் ஒன்றிணைந்துகூட மே தின நிகழ்வுகளை நடத்த முடியவில்லை. ஆனால் எமது தேசிய மக்கள் சக்தி 21 மே தினக் கூட்டங்களை நாடு முழுவதும் நடத்துகின்றது.” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நாட்டில் தேசிய வருமானத்துக்கு அதிக டொலர் வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் தோட்டத் தொழிலாளர்கள் இக்கூட்டத்துக்கு வருகை தந்துள்ளனர். எவ்வித போராட்டமும் இன்றி எமது பிரச்சினைகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிச்சயம் தீர்த்து வைத்து வருகின்றார்.
போராட்டம் இன்றியே அவர் சம்பள உயர்வையும் பெற்று தந்தார்.” எனவும் கலைச்செல்வி எம்.பி. குறிப்பிட்டார்.
