மலையக தமிழர்களின் குடியுரிமை பறிப்பே 74 வருட தரித்திரத்தின் முதற்கோணல் – மனோ

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,

நேற்று மாலை கொழும்பில் எதிரணி கட்சிகளை அழைத்து காலிமுக போராளிகள் நடத்திய சர்வகட்சி மாநாட்டில் நான் உரையாற்றும் போது சிங்கள மொழியிலும், தமிழ் மொழியிலும் பேசினேன்.

9ஆம் திகதி, தாம் நடத்தும் கோதா எதிர்ப்பு போராட்டத்துக்கு, எதிரணியின் ஆதரவை, காலிமுக போராளிகள் கோரினார்கள். சந்தோஷமாக எமது ஆதரவை தெரிவித்தோம்.

அதேவேளை, நான் பேசும் போது தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் சில விஷயங்களை அனைவருக்கும் ஞாபகப்படுத்தினேன்.

“நான் சொல்வதை , நீங்கள் ஏற்றுக்கொண்டால்தான், உங்களுக்கு எங்கள் ஆதரவு” என நான் நிபந்தனை எதுவும் போடவில்லை. ஆனால், ஞாபகப்படுத்தினேன்.

போராளிகள் மட்டுமல்ல, அங்கே, சஜித் பிரேமதாச, மைத்திரிபால சிறிசேன, சம்பிக்க ரணவக, அனுர பிரியதர்ஷன யாபா, ரஞ்சித் மதும பண்டார, ராஜித சேனாரத்ன, திஸ்ஸ அத்தநாயக …ஆகிய நம்ம எதிரணியினரும் அமர்ந்து இருந்தார்கள்.

எல்லோருக்குமாகத்தான் சுத்த சிங்களத்தில் சொன்னேன். ஞாபகப்படுத்த வேண்டியவைகளை அவ்வந்த வேளைகளில் சொல்லிவிட வேண்டும், பாருங்கள்..!

“புது மாற்றங்கள்” வருகின்றன என சொல்லப்படும், இது ஒரு கனாக்காலம். அப்புறம் இப்படி ஒரு சந்தர்ப்பம் வருமோ தெரியாது. வந்தாலும் நான் உயிருடன் இருப்பேனோ தெரியாது.

“1948ல் வருடம் மலையக உழைப்பாளிகளின் குடியுரிமை-வாக்குரிமை பறிக்கப்பட்டமை 74 வருட தரித்திரத்தின் முதற்கோணல். அப்புறம் சிங்களம் மட்டும் சட்டம் இரண்டாம் கோணல்” என்று ஆரம்பித்தேன்.

இன்னும் சொன்னேன்.”தம்பி, உங்கள் ஆவணத்தில் தேசிய இனப்பிரச்சினை பற்றி ஒன்றும் இல்லை. ஆனால், இங்கே உங்களின் ஒருவர் சேனாதி குருகே (Senadi Guruge) பேசும்போது, இது சிங்கள போராட்டமல்ல. தமிழ், முஸ்லிம்களும் சேர்ந்த போராட்டம் என்று கூறினார். அதுவரையில் மகிழ்ச்சி.”

“அதேபோல் நீங்கள் அமைக்க விரும்பும் நாடும், சிங்கள-பெளத்த நாடாக இருக்க கூடாது. அது சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடாக இருக்க வேண்டும்.”

“சிங்கள-பெளத்த நாடு என்று அமைக்க போனீர்கள் என்றால், இந்நாட்டில் இன்னொரு மூலையில் தமிழ்நாடும் அமையும். அது நியாயம்தானே?” என்று கேட்டேன்.

“ஆம்” என சேனாதி குருகே, அவருக்கு முன் பேசிய ரந்திமல் கமகே ஆகிய முன்னாலே இருந்தோர் தலையாட்டினார்கள்.

இன்னும் கொஞ்சமாக நிறைய பேசிவிட்டு உங்கள் போராட்டத்துக்கு எங்கள் “முழுமையான ஆதரவு” என அறிவித்து விட்டு வந்தேன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles