மலையக தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை – ஜனாதிபதி உறுதி!

” நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து இலங்கை  மீண்டெழுவதற்கான முயற்சிக்கு இந்தியா உதவியது. இந்திய பிரதமர் தலைமையிலான அந்நாட்டு அரசு எமக்கு வழங்கிய உதவி, வாழ்வதற்கானதொரு சுவாசம்.  இந்திய பிரதமர், அரசு மற்றும் அந்நாட்டு மக்களுக்கு இலங்கை மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று கொள்கை விளக்க உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

” இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவது , நாட்டுக்காக நான் ஆற்றும் கடமை என நினைத்தேன், அதனால்தான் சவாலை ஏற்றேன். நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைவோம். எனவே, சர்வக்கட்சி அரசியல் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எரிவாயு விநியோகிக்கப்படுகின்றது. பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. என்றுமில்லாத வகையிலான பொருளாதார நெருக்கடியையே நாம் எதிர்கொண்டுள்ளோம். எனவே, இவ்வருடம் இறுதிவரை நெருக்கடி நிலை தொடரும்.

இடைக்கால வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படும். அதில் பல திட்டங்கள் முன்வைக்கப்படும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகள் தொடரும். அதனை வெற்றிகரமாக நிறைவுசெய்ய எதிர்பார்க்கின்றோம்.

மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles