‘மலையக மக்களுக்கான உரிமைகளை இழப்பதற்கு தயாரில்லை’ – செந்தில் தொண்டமான் திட்டவட்டம்

தேர்தல் சட்ட மறுசீரமைப்புகளின் போது மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தை கடுகளவேனும் குறைத்துக்கொள்ள தயாராகவில்லை என்பதுடன், சமரசங்களின்றி எமது உரிமைகளையும் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் வென்றெடுப்பதற்காக களப்பணியாற்றுவோமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது,

மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் காலம் முதல் அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலம் வரை ஆளும் அரசாங்கங்களின் இருந்த போதும் சமரமின்றி இ.தொ.கா. குரல்கொடுத்துள்ளது. பல்வேறு அர்ப்பணிப்புகளுக்கு மத்தியிலும் போராட்டங்களுக்கு மத்தியிலும் வென்றெடுக்கப்பட்டுள்ள எமது அரசியல் உரிமைகளையும் பிரதிநிதித்துவத்தையும் புதிய தேர்தல் திருத்தச்சட்டத்தின் ஊடாக இழப்பதற்கு நாம் தயாரில்லை.

நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஆளுங்கட்சிக் கூட்டத்தில் நான் உட்பட ஜீவன் தொண்டமான் ஆகியோர் கட்சி சார்பாக கூட்டத்தில் கலந்துக் கொண்டோம். இக்கூட்டத்தில் புதிய மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்ட முறைமை தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இத்திருத்தச்சட்டத்தின் ஊடாக வெறும் 5 மாகாண சபை உறுப்பினர்களை மாத்திரமே மலையக மக்களால் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருக்கும்.

கடந்த காலங்களில் கேகாலை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கொழும்பு, பதுளையென பல்வேறு இடங்களில் இ.தொ.காவின் தேர்தல் பொறுப்பாளராக அமரர் ஆறுமுகன் தொண்டமானால் நியமிக்கப்பட்டிருந்தேன். இந்த சந்தர்ப்பங்களில் இ.தொ.கா பல மாகாண சபைளில் உறுப்பினர்களை வென்றெடுத்தது. அதனால் நேரடியாக அனைத்து மாவட்டங்களில் களப்பணியாற்றிய அனுபவம் மற்றும் புவியில் ரீதியான தரவுகளின் அடிப்படையில் புதிய தேர்தல் சட்டத்தின் ஊடாக 5 மாகாண சபை உறுப்பினர்கள் மாத்திரமே முழு மலையக மக்களுக்கு கிடைக்கப்பெறுமென பிரதமர் உட்பட ஆளுங்கட்சி தலைவர்களுக்கு எடுத்துரைத்ததுடன், 5 மாகாண சபை உறுப்பினர்கள் என்றால் முழு மலையகத்திற்கும் வெறும் 2 பாராளுமன்ற பிரதிநிதித்துவம்தான் வெற்றிக்கொள்ள கூடிய சூழ்நிலை அமையும். என்பதையும் ஆணித்தரமான சுட்டிக்காட்டினேன்.

இந்த வரலாற்று தவறு இடம்பெறுவதற்கு ஒருபோதும் நாம் அனுமயளிக்க மாட்டோம். எமது இன்றைய தலைமுறையை போன்று நாளைய தலைமுறையின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நிற்கிறோம். அதனால் 25 தனித் தமிழ் மாகாணசபை உறுப்பினர்களை வென்றெடுக்கும் தொகுதிகள் நுவரெலியா, பதுளை உட்பட மலையக மக்கள் பரந்துவாழும் மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட வேண்டுமென தெளிவாக ஆளுங்கட்சித் தலைவர்களுக்கு நான் விளக்கப்படுத்தினேன்.

25 மாகாண சபை உறுப்பினர்கள் இருந்தால் மாத்திரமே 11 அல்லது 12 பாராளுமன்ற உறுப்பினர்களை மலையக மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். இந்த விடயத்தில் எந்த அடிப்படையிலும் சமரசம் செய்துக்கொள்ள தயாரில்லை. புதிய தேர்தல் சட்டத்தில் மலையக மக்களின் உரிமைகளை வெற்றிக்கொள்ள உறுதியாக ஆளும் அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு போராடுவோம் என்பதுடன், நாம் முன்வைத்துள்ளது கோரிக்கை நியாயமானதென அரசாங்கம் ஏற்றுக்கொண்டு உரிய மறுசீரமைப்புகளை முன்மொழிவதாகவும் உறுதியளித்துள்ளது என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles