இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமானின் பதுளை, உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு, இந்திய உதவி உயர்ஸ்தானிர் DR. அதிரா மரியாதை நிமித்தமாக விஜயம் மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின்போது , இலங்கை, இந்தியாவுக்கிடையிலான கலாச்சார மற்றும் பொருளாதார ரீதியிலான உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், மலையக மக்களுக்கு எதிர்காலத்தில் தேவையான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் டி.வி சென்னன், மாகண சபை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தலைவர்கள், உப தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்றனர்.











