”அர்த்தமுள்ள தீபாவளியை கொண்டாட அனைவரும் உதவுவோம்” என்ற தொனிப்பொருள் கீழ் உதவும் கரங்கள் அமைப்பு மற்றும் விழித்தெழு அறக்கட்டளை ஒன்றியம் ஆகியன இணைந்து மக்களுக்கு உதவும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இரத்தினபுரி மாவட்டத்தின் காஹவத்தை – நாபுலுவ தோட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பிரிவு மக்களுக்கும், பலாங்கொடை வளவை தோட்டத்திலுள்ள மக்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.
கொவிட் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கும், கொழும்பு வாழ் உறவுகளுக்கும், கேகாலை மாவட்ட வரகாபொல, தொடந்தெனிய, எட்னாவள, கணிதபுர தோட்ட மக்களுக்கும், நூரித்தோட்ட மக்களுக்கும் சுமார் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று, கேகாலை – நூரி தோட்டத்தில் விசேட தேவையுடையோருக்கு, சக்கர நற்காலி, ஊன்று கோல் மற்றும் சீமெந்து ஆகியனவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.