மலையக மக்களை ஏமாற்றி பல லட்சங்களை சுருட்டிய நபருக்கு மறியல்

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 10 பேரிடம் 30 இலட்சம் ரூபா  பணத்தினை பெற்று ஏமாற்றிய நபரொருவரை மார்ச் மாதம்  08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை மாவட்ட நீதி மன்ற நீதவான் நாமல் பெரேரா உத்தரவிட்டார் வட்டவளை,  கடவல தோட்டப்பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே திங்கட்கிழமை (27) மேற்படி விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேக நபர் குழுவாக இணைந்து  கம்பளை’  கேகாலை,கினிகஸ்தேனை, நாவலப்பிட்டி, தலவாக்கலை,பொகவந்தலாவ உட்பட நாட்டில் பல பாகங்களிலும்  30 பேரைவரை ஏமாற்றி சுமார் இரண்டு கோடி ரூபா விற்குமேல் பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளதாக தெரியவருவதோடு அதில் கம்பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற 10 முறைப்பாடுகள் தொடர்பாக நீதி மன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

மேற்குறிப்பிட்ட சந்தேக நபரும் குழுவினரும்  இணைந்தே நாட்டின்  பலபாகங்களிலும்

மலேசியா உட்பட வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாகக் கூறி நபர் ஒருவரிடமிருந்து 2 இலட்சம் முதல் 5 இலட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளதோடு  நேர்முக பரீட்சை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் என்பனவும் மேற்கொண்டு

விமான டிக்கட்டுகளின் நகல்களையும் வழங்கியுள்ளதாக தெரியவருவதுடன் இறுதியாக    கடந்த 22 ஆம் திகதி கம்பளை நகரிலும் நேர்முகப் பரீட்சை மருத்துவ பரிசோதனை என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளது

மேலும் மேற்குறிப்பிட்ட சந்தேக நபருடன் தொடர்புடைய ஏனையவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கையில் கம்பளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles