பெருந்தோட்டத்துறை பாதுகாப்பு குறித்து நாளை விசேட கூட்டம்!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கூட்டமொன்று நாளை [21.05.2026] பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பெருந்தோட்ட கம்பெனிகளின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

பெருந்தோட்டத் துறையில் நிலவும் பாதுகாப்பு சவால்கள், அடக்குமுறைகள்
தொழிலாளர் நலன் மற்றும் சட்ட ரீதியான அணுகுமுறைகள் தொடர்பான விடயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.

Related Articles

Latest Articles