“மலையக மக்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் எந்தவோர் உடன்பாட்டுக்கும் இ.தொ.கா வளைந்து கொடுக்காது” – செந்தில் தொண்டமான் சபதம்

” மலையகப் பெருந் தலைவர்களான செளமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் உன்னத வழிகாட்டலில் உருப்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகிமை கெடாமல், மலையக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, அர்ப்பணிப்புடன் தொண்டாற்றுவேன்” என, இ.தொ.காவின் புதிய தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் இந்திய வம்சாவளித் தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தி, அவர்களின் அரசியல், பொருளாதார, தொழிற்சங்க உரிமைகள் மற்றும் ஏனைய நலன்புரி விடயங்களைக் காப்பதற்கான மாபெரும் ஸ்தாபனமாக உருவாக்கப்பட்ட, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுடனும் ஒன்றிணைந்து, எங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

83 வருட வரலாற்றைக் கொண்ட “இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்”, 1939 ஜூலை 25ம் திகதி”இலங்கை இந்திய காங்கிரஸ்” என ஸ்தாபிக்கப்பட்டு,1950 ஆம் ஆண்டு “இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்”எனும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இலங்கை அரசியலில் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் அவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து, பல சாதனைகளை படைத்து, உலகிலே அதிக சாதனைகளை படைத்த தொழிற்சங்கமாக இன்று வரை திகழ்கின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் உறுப்பினராக இருப்பதென்பதே பெருமைக்குரிய விடயமாக இருக்கும் நிலையில், அதன் தலைவராகச் செயற்படுவதென்பது ஒரு பாரிய பொறுப்பாகும். என்னை தலைவராக தேர்ந்தெடுத்த தேசிய சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என, இ.தொ.காவின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“இன்று நாடு இருக்கும் இக்கட்டான சூழ்நிலை மற்றும் மக்களின் பாரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பை பொறுப்புடனும் அர்ப்பணிப்புடன் ஏற்று, உரிய கடமைகளை திறம்பட நிறைவேற்றுவேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மலையக மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மற்றும் பாதுகாப்பு என்ற அனைத்து உரிமைசார் விடயங்களிலும் இ.தொ.கா முன்னின்று செயற்படும். எம்மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் எந்தவோர் உடன்பாட்டுக்கும் இ.தொ.கா வளைந்து கொடுக்காது, மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் காட்டிய வழியில் தடம் மாறாது தொடர்ந்து இ.தொ.கா பயணிக்கும் என்றும், அதன் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles