மஸ்கெலியா, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை – மல்லியப்பு தோட்டத்தில் கடந்த (28) திகதி தனி வீடொன்றை உடைத்து தொலைக்காட்சி , கை தொலைபேசி போன்றவற்றை களவாடிய நபர் ஒருவர் நேற்று முன்தினம் மஸ்கெலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, களவாடப்பட்ட தொலைக்காட்சி மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த (29) ம் திகதி அன்று வீட்டு உரிமையாளரால் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
( ஞானராஜ்)










