ஹட்டன்- மல்லியப்பு தோட்டத்தில் உள்ள கோவில் உடைக்கப்பட்டு, அங்கிருந்த இரண்டு உண்டியல்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
குறித்த கோவிலுக்குள்நேற்று முன்தினம் (21) இரவு 10 மணியளவில் நுழைந்த சிலர், கோவிலிருந்த உண்டியலைகள் இரண்டை எடுத்துச் சென்று, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் வீசிச் சென்றுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கோவில் நிர்வாகத்தால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் திருடர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.










