மஸ்கெலியா நகரிலுள்ள சில வர்த்தக நிறுவனங்கள் இன்று (27) அதிகாலை உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
காய்கறி கடை, உணவகம் ,பலசரக்கு கடை உட்பட 9 கடைகள் இவ்வாறு உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளன.
சிசிடிவி கெமரா பதிவுகளின்படி திருடன் முகத்தை முழுமையாக மூடியிருந்ததாகவும் தனி நபர் ஒருவரே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதையும் காணகூடியதாக இருக்கின்றது.
மேலும் இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவைம் நகர பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாமிமலை ஞானராஜ்