மஹர சிறைச்சாலை கலவரம் பற்றி விமல் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சர்வதேச ரீதியில் அவமதிப்பை ஏற்படுத்த ஒழுங்கமைக்கப்பட்ட சதி நடவடிக்கையே மஹர சிறைச்சாலை கலவம் என்று அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் கூறியதாவது,

” கொரோனா நோயாளிகளின் நெரிசலின் விளைவாக இந்த சம்பவம் நடக்கவில்லை. சதுரங்க உள்ளிட்ட குழுவினர் மாத்திரைகளை விநியோகித்துள்ளனர். இந்த மாத்திரைகளை பயன்படுத்தும் போது ​​ஒருவரின் இரத்தத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இந்த பரிசோதனையை இருவருக்கு செய்தபின், வெலிடை சிறைச்சாலையில் முடிந்தவரை மாத்திரையை விநியோகிக்கவும், ஒரு கொலைகார சூழ்நிலையை உருவாக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த கைதிகளால் சதுரங்க வழிநடத்தப்பட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவினர் இதைப் பற்றி அறிந்து கொண்டு சதுரங்க என்ற இந்த கைதியை வேறு சிறைக்கு மாற்றினர். இதில் சம்பந்தப்பட்ட ஒரு சில கைதிகளையும் மாற்றினர். இதனால் வெலிகடை சிறைச்சாலையில் இந்த சூழ்நிலையை உருவாக்க முடியவில்லை.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மஹர சிறைச்சாலையில் இந்த திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இது நெரிசலால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்டதாக கருத முடியாது. அப்படி நினைப்பது இலகுவானது. இதனை நான் அறிந்ததால் கூறுகிறேன்.

இது திட்டமிட்ட செயல். கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது சிறையில் கொலைகள் நடந்தன. அவர் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் இப்படியான சம்பவம் நடந்துள்ளது என சித்தரிக்கவும் இது நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் ஜனாதிபதிக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதே இதில் இருக்கும் உண்மையான கதை.” – என்றார்.

Related Articles

Latest Articles