‘மஹிந்தவும், ரணிலும் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும்’ – சம்பிக்க கோரிக்கை

” பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும்.” – என்று 43 ஆவது படையணியின் ஒருங்கிணைப்பாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

” இவ்விருவரும் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளனர். அதேபோல குறைபாடுகளும் உள்ளன. அதேபோல இருவருக்கும் இடையில் மாறுபட்ட திறமைகள் உள்ளன.

குடும்பத்துக்கு முக்கியத்துவம் வழங்காமல் மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும். அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவும் 25 ஆண்டுகள் தலைவர் பதவியை வகித்துவிட்டார். அவரும் விடைபெற வேண்டும்.” – என்றும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles