அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரணசிங்க பிரேமதாச ஆதரித்தாரா என்பது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய ஏற்பாட்டாளர் ரோஹித அபேகுணவர்தன.
“ காணி, பொலிஸ் அதிகாரம் தொடர்பில் சஜித் பிரேமதாசவின் நிலைப்பாடு என்ன? பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் மாகாணங்களிலும் பொலிஸ்மா அதிபர்கள் செயற்படக்கூடும்.
நாட்டு மக்கள் தற்போது போரின்றி வாழ்கின்றனர். எனவே, மஹிந்தவும், படையினரும் பாதுகாத்த நாட்டை காட்டிக்கொடுக்க வேண்டாம். .” – எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.