முதலில் உள்ளூராட்சித் தேர்தலன்றி மாகாண சபைத் தேர்தலையே நடத்த வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் ஒன்றிணைந்த ஊடக சந்திப்புஎதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே ரவூப் ஹக்கீம் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டின் தேர்தல் வரைபடம் மாற்றப்பட்டுள்ளது. எல்லை நிர்ணய ஆணைக்குழுவைப் பயன்படுத்தி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றன. அதனால்
சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் அபாயமுள்ளது. அது தொடர்பில் நாம் மிகவும் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சித் தேர்தலையன்றி மாகாண சபைத் தேர்தலை நாம் கோருகிறோம். பழைய தேர்தல் முறையில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
