மாகாணசபைத் தேர்தலக்கு தயாராகவே இருக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்களுக்கு கட்சி மேல் மட்டத்தால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்பதால் தற்போதில் இருந்தே ஏற்பாட்டு பணிகளை ஆரம்பிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களுக்கான விசேட கூட்டமொன்று பஸில் ராஜபக்ச தலைமையில் விரைவில் கொழும்பில் இடம்பெறவுள்ளது. அக்கூட்டத்தின் பின்னரே வேட்பாளர் தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, முதலமைச்சர் வேட்பாளர்கள் தொடர்பிலும் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஊவா, தென் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களே முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளனர் எனவும், பதவி துறப்பது தொடர்பில் கட்சி மேல் மட்டத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.
பழைய முறையிலேயே மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அதற்கான சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும்.
