இரத்தினபுரி, நிவிதிகல நிரியெல்ல தமிழ் மகா வித்தியாலயத்தின் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவி உட்பட மூவரையும் எதிர்வரும்9ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இரத்தினபுரி மாவட்ட மேலதிக நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட மூவரும் இரத்தினபுரி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
எம்.எப்.எம். அலி