மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது!

பலாங்கொடை நொன்பேரியல் இயற்கை வனத்தில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்ந்த 6 பேரை நொன்பேரியல் வனப்பாதுகாப்பு காரியாலய அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.

இவ்வனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் வழமையான‌ பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது இவர்கள் தப்பி ஓட முற்பட்டுள்ளனர். இவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். இரத்தினக்கல் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வனத்தில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வுகள், காடழிப்பு, வேட்டையாடுதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருவதனால் இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles