அரச சேவை ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் எஸ். ஏ. நிமல் சரணதிஸ்ஸ, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் ஏனைய உறுப்பினர்களாக பீ. சனத் பூஜித, ஈ. ஆர். வீரகோன், ஆர். கேதீஸ்வரன், ஜே. எம். ஆர். ஜயசுந்தர, ஈ. ஏ. பி. என். எதிரிசிங்க, வைத்தியர் எஸ். ஏ. ஏ. என். ஜயசேகர, எம். எச். மொஹமட் சமீல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான நியமனக் கடிதங்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
அரச சேவை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசசேவை ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள ரூபவதி கேதீஸ்வரன் , கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரச அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

