நோர்வூட் பகுதியில் உள்ள காசல்ரி நீர் தேக்கத்துக்கு, நீரை வழங்கும் பிரதான ஆறுகளில் ஒன்றான கெசல்கமு ஓயாவில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நேற்று மாலை கைது செய்யபட்டவர்களிடமிருந்து, மாணிக்கக்கல் அகழ்வுக்கான பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
செ.தி. பெருமாள்
