மாத்தளை பிரதேசத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு

மாத்தளை நகரிலும் நகரை சூழவுள்ள சில உபநகரங்களில் அமைந்துள்ள மருந்தகங்களில் அனேகமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் நோயாளிகள் பல அசௌகரியங்களுக்கு முகங் கொடுப்பதாக அறிவிக்கப்படுகின்றது.

மாத்தளை நகரிலும் நகரை சூழவுள்ள உபநகரங்களில் மருந்தகங்களில் பெனடோல், பெனடோல் சிரப், பிரின்டன் சிரப், பெனடின், பெரசிடமோல் உட்பட அனேகமான மருந்துவகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குழந்தைகளுக்கான பால்மாவிற்கும் பெரும் தட்டுப்பாடான நிலையில் தாய்மார்கள் உட்பட கர்பிணி தாய்மார் பல்வேறு சவால்களுக்கு முகங் கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles