மாத்தளை மாநகரசபையின் பாதீடு நிறைவேற்றம்!

மாத்தளை மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மாத்தளை மாநகர சபை இன்று(12) கூடிய போது 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை மாநகர மேயர் சந்தனம் பிரகாஷ் சபையில் தாக்கல் செய்தார்.

மாத்தளை மாநகர சபையில் 21 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்ற நிலையில், இன்றைய வரவு செலவுத்திட்ட அமர்வில் 16 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வரவு செலவுத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் 15 உறுப்பினர்கள் ஆதரவாகவும் ஒருவர் எதிராகவும் வாக்களித்தனர்.

இன்றைய(12) வரவு செலவுத்திட்ட அமர்வில் 05 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.

அதற்கமைய, மாத்தளை மாநகர சபையின் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Related Articles

Latest Articles