‘மாயாண்டி குடும்பத்தார்’ – இரண்டாம் பாகம் விரைவில்

‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த இயக்குனர் ராசு மதுரவனின் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாயாண்டி குடும்பத்தார்’.

இந்த படத்தில் சீமான், தருண் கோபி, சிங்கம் புலி, மயில் சாமி, மணிவண்ணன், பொன்வண்ணன், ரவிமரியா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தை யுனைடெட் ஆர்ட்ஸ் (UnitedArts) நிறுவனம் தயாரித்திருந்தது.

குடும்பக்கதையையும், பங்காளிச் சண்டையையும் மிகவும் நேர்த்தியாக வெளிக்காட்டிய இந்த படம் 2009-ம் ஆண்டு வெளியான சிறந்த படங்களுக்கான தமிழக அரசின் விருதில் இரண்டாம் பரிசையும் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் பாகத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் (UnitedArts) நிறுவ
2-ம் பாகத்தை தயாரிக்க உள்ளதாகவும், கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.பி. ஜெகன் படத்தை இயக்க உள்ளதாகவும், முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர் .

இயக்குனர் கே.பி.ஜெகன் ‘மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படத்தில் மாயாண்டி கதாபாத்திரத்தின் மகன்களின் ஒருவராக நடித்திருந்தார். மேலும் இவர் விஜய்யின் புதிய கீதை, கோடம்பாக்கம் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார்.

Related Articles

Latest Articles