மாவனெல்ல பஸ் தரிப்பிடத்தின் கூரை காற்றில் அள்ளுண்டுச் சென்றதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கடுமையான மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த பஸ் தரிப்பிடத்தின் கூரை காற்றில் பறந்து பல மாதங்கள் ஆன நிலையில், அதனை புனரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் அவதானம் செலுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
