மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுள் மேலும் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அத்தொழிற்சாலையில் ஊழியர்களிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுவருகின்றது.
இப்பரிசோதனையின் மற்றுமொரு முடிவு சற்று நேரத்துக்கு முன்னர் வெளியானது. இதில் ஆடை தொழிற்சாலையில் மேலும் 124 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டது.
குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த நேற்று 101 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இன்று இதுவரையில் 832 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 252 ஆக அதிகரித்துள்ளது.
