மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி: மாத்தளையில் சோகம்!

மாத்தளை யட்டவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாலவெல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூவர் வயலுக்கு சென்றுள்ள நிலையில், மிருகங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

3 பிள்ளைகளின் தந்தையான 42 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை மாத்தளை யட்டவத்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles