மின்தடை ஏற்படும் போது, இன்டர்நெட் வசதி தடை?

தொலைபேசி கோபுரங்களின் ஜெனரேட்டர்களுக்கான டீசல் கிடைக்கப் பெறாமையால், இன்று முதல் நாடளாவிய ரீதியில் தொலைபேசி கோபுரங்களில் மின் தடை ஏற்படும் போது அவற்றின் 3G மற்றும் 4G டிரான்ஸ்மிட்டர்களின் interference reduction ( குறுக்கீடு குறைப்பு அமைப்புகள் ) செயலிழக்கப்படும்.

இதற்காக டீசல் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்ட போதிலும் போதிய அளவு டீசல் இல்லாமையால் Backup Battery மூலம் கிடைக்கும் சக்தி போதுமானதாக இல்லை.

இவை செயலிழக்கப்படும் போது 3G, 4G Network அதிவேகங்களில் செயற்படாது எனவும்

இதன் விளைவாக அதிக சனத்தொகை உள்ள பகுதிகளில் சிக்னல் குறுக்கீடு ஏற்பட்டு 2G (384kbps, அல்லது அதிகபட்சமாக 48 கிலோபைட் ஒரு வினாடி) வேகத்தில் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, மின்தடை ஏற்படும் போது, ​​ஜெனரேட்டர், Off grid system ( ஆஃப் கிரிட் சிஸ்டம்,) பவர்பேங்கில் வோல்டேஜ் அதிகரிப்பு அல்லது வேறு வழிகளில் இயங்கும் ரவ்டர் இயக்குவதில் எந்தப் பயனும் இல்லை.

Related Articles

Latest Articles