மின்னா தோட்ட மக்களுக்கு ‘வழி’ பிறக்குமா?

மஸ்கெலியா, சாமிமலை – மின்னா தோட்டத்தில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் பாதையே இது…

சாமிமலையிலிருந்து மின்னா தோட்டம் வரையிலான இப்பாதையையே பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள், நோயாளிகள் உட்பட பலரும் போக்குவரத்துக்காக பயன்படுத்திவருகின்றனர்.

குன்றும் குழியுமாக காணப்பட்ட இப்பாதையை 2.5 கி.மீ. தூரம்வரை புனரமைப்பதற்கு நல்லாட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும், வெறும் 100 மீற்றர் தூரமே புனரமைக்கப்பட்டு அதற்கு திறப்பு விழாவும் நடத்தப்பட்டுள்ளது என மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

நிதி ஒதுக்கப்பட்டும் பாதை ஏன் முழுமையாக புனரமைக்கப்படவில்லை என கேள்வி எழுப்பும் மக்கள், தமக்கான பாதையை விரைவில் புனரமைத்து தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Articles

Latest Articles