மின்மாற்றிகளின் செப்புக் கம்பிகளை திருட முயன்றவர் மின்சாரம் தாக்கி பலி!

அம்பாறை நகரில் மின்மாற்றிகளின் கம்பிகளை திருட முயற்சி செய்த நபர் 30,000 வோல்ட் உயர் மின்னழுத்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (26) அதிகாலை 2.00 மணியளவில் அம்பாறை மின்சாரம் விநியோகிக்கப்படும் இடத்தில் காணப்படும் செப்புக் கம்பியை வெட்டுவதற்காக வந்துள்ளார்.

இவ்வாறு கம்பியை வெட்ட முயன்றபோது மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக அருகில் உள்ள கிராம மக்கள் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மின்சார சபை ஊழியர்கள் மற்றும் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்து அவர்கள் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து குறித்த நபரை மீட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மின்சார சபையினால் இயக்கப்படும் மின்மாற்றிகளை தரையுடன் இணைக்கும் புவித் தொடுப்பு கம்பியை (Earth Wire) சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சில குழுவினர் வெட்டி அகற்றிச் சென்றுள்ளனர்.

இது குறித்து அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் உபுல் குமாரகேவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மின்சார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்தமைக்கு அமைய, அம்பாறை நகரைச் சுற்றியுள்ள மின்மாற்றிகளைச் சோதனை செய்த மின்சார சபை அதிகாரிகள் 17 மின்மாற்றிகளின் புவித் தொடுப்பு கம்பிகள் இவ்வாறு வெட்டப்பட்டு களவாடப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, 17 கம்பிகள் இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பிராந்திய மின் பொறியியலாளர் பிரபாத் செனவிரத்ன அம்பாறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மின்மாற்றியில் இருந்து தரையுடன் இணைக்கப்பட்ட புவித் தொடுப்பு கம்பிகள் செம்பினால் செய்யப்பட்டவை என்பதோடு, அதிலுள்ள செம்பை எடுத்து விற்பனை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

அம்பாறை நகர எல்லைக்குட்பட்ட நவகம்புர, தொழில்நுட்ப பிரதேசம், சாமபுர, சத்தாதிஸ்ஸபுர, கெமுனுபுர, திஸ்ஸபுர ஆகிய கிராமங்களின் மின்மாற்றிகளில் இவ்வாறு புவித் தொடுப்பு கம்பிகள் வெட்டப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில் அம்பாறை நவகம்புர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

அம்பாறை தலைமையகப் பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles