” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனி ஒருவராக சவாலை ஏற்றார். சவாலை ஏற்பது எனக்கும் பிடிக்கும். அதனால்தான் அவர் பக்கம் நின்றேன்.”
இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் 76 ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஹரின் இவ்வாறு கூறினார்.
” ஐ.தே.கவுக்குள் மீண்டும் வரும்போது, எனக்கு எவ்வித தயக்கமும் இருக்கவில்லை. ஏனெனில் இதுதான் எனது தாய்வீடு. நான் குழப்பக்காரன். தந்தையுடன் கோவித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன். மீண்டும் தந்தையிடம் வந்துவிட்டேன். மகிழ்ச்சி.” – என்றார்.
