முடிந்தால் வெளியில் வந்து பேசுங்கள் – நானும் கண்டிக்கு வாரேன் – ஜீவனுக்கு மனோ சவால்!

“ மலையக அமைச்சர் கோபமாக பேசுகின்றார், பதற்றத்துடன் பேசுகின்றார். 5 வருடங்களாக வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்க முடியாமல்போனதையிட்டுதான் அவர் பதற்றமடைய வேண்டும். 2019 இல் அரசில் இருக்கும் இந்த நபர் பேசி, பேசியே காலத்தை ஓட்டுகின்றார்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய மனோ கணேசன்,

“ கொழும்பில் நாம் 200 நிகழ்வை நடத்தினார்கள், எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருந்தும் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகளை தெரிவித்தேன். நான் நாகரீகமும், பண்பாடும் கொண்ட குடும்ப பின்னணியில் வளர்ந்தவன். எனது பெற்றோர் என்னை அப்படிதான் வளர்த்துள்ளனர். ஆகவே எனக்கு நாகரீகம், பண்பாடு தெரியும்.

எமது கண்டி மாவட்ட எம்.பி. வேலுகுமார் இங்கே இருக்கின்றார். கண்டி, ஹந்தானை இவர் 22 ஏக்கர் நிலத்தை அபகரித்துவிட்டதாக பொய் கூறுகின்றார். இந்த அமைச்சர் இது பற்றி நாடாளுமன்றத்துக்கு வெளியே வந்து பேசுவாரானால் நாம் நீதிமன்றம் செல்ல தயாராக இருக்கின்றோம்.

நானும் கண்டிக்கு வருகின்றேன். வேலுகுமார் பிடித்து வைத்துள்ளார் எனக் கூறப்படும் நிலத்தை மக்களுக்கு பிரித்து வழங்குவோம். எனவே, தயவு செய்து பொய்கூற வேண்டாம்.” – என்றார்.

Related Articles

Latest Articles