முடிந்தால் 100 பேரை அழைத்துவந்து கூட்டமொன்றை நடத்திக் காட்டுங்கள்- தினேஷ் குணவர்தன

” முடிந்தால் 100 பேரை அழைத்துவந்து கூட்டமொன்றை நடத்திக் காட்டுங்கள்.”

இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிசுக்கு சவால் விடுத்துள்ளார் பிரதமர் தினேஷ் குணவர்தன.

” உள்ளாட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு மொட்டு கட்சியினருக்கு வேட்பாளர்கள் இல்லை என சிலர் கூறினர். ஆனால் ஆட்சியின் இருப்பு மொட்டு கட்சி வசம்தான் என்பது அவர்களுக்கு புரிவதில்லை. ஏசி அறையில் இருந்துகொண்டுதான் பீரிஸ் கருத்துகளை வெளியிடுகின்றார். முடிந்தால் 100 பேரை அழைத்துவந்து கூட்டமொன்றை நடத்தட்டும்.” – எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles