சாதாரண விலையைவிடவும் அதிக விலைக்கு முட்டை விற்கப்படுவதால் விரைவில் கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்த அதிகபட்ச சில்லறை விலை அடுத்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்குச் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
50 ரூபாவுக்கும் குறைவாக முட்டையை விற்பனை செய்ய முடியும் என்றபோதிலும் 60 ரூபாவரை சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.










