‘முதலீடுகளை மேற்கொள்ளுங்கள்’ – வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

நாட்டை கட்யெழுப்புவதற்கு குறித்த முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

” நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு உள்ளிட்டவை பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்குகின்றேன். நாட்டுக்கு தேவையான விடயங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படும். நாம் சர்வதேச சட்டத்திட்டங்களை மதிக்கின்றோம். எனினும், சிலர் போலியான கருத்துகளை பரப்பிவருகின்றனர். மனித உரிமைகளை மீறுவதற்கான கட்டளையை நாம் பிறப்பிக்கவில்லை. இந்நாட்டில் மீண்டும் அடிப்படைவாதம் தலைதூக்க இடமளிக்கமாட்டோம்.

எமது நாட்டை கட்யெழுப்புவதற்கு அணிதிரளுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles