‘முதல் தடவையாக ஒன்லைன்மூலம் கோப்குழு விசாரணை’

முதல் தடவையாக ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு நாளை (26) கூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளையதினம் (26) கூடவுள்ள கோப் குழுவில், களனி கங்கை நீர் மாசவடைவது தொடர்பில் ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக அதிகாரிகளை தொடர்புபடுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் எஸ்.எச்.முனசிங்ஹ, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.ஏ. சுலானந்த பெரேரா மற்றும் பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிரி ஆகியோர் ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக கோப் குழுவுடன் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகள், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள், முதலீட்டு சபையின் அதிகாரிகள் நாளையதினம் பாராளுமன்றத்தில் கோப் குழுவில் கலந்துகொள்ளவுள்ளனர்.
கொவிட்-19 தொற்றுநோய் சூழல் காரணமாக சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால், நேரடியான வருகைகளைக் குறைக்கும் நோக்கிலும், கோப் குழுவின் பணிகளை நெறிப்படுத்தும் நோக்கிலும் ஒன்லைன் முறைமையை பயன்படுத்தப்படுகிறது.

Related Articles

Latest Articles