‘முதியவர்களைப் பயன்படுத்தி பணம் வசூலிப்போருக்கு வலை’

” முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பயன்படுத்தி மக்களிடம் பணம் திரட்டி, அதனை வியாபாரமாகவே கொண்டு நடத்துபவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை திரட்டியுள்ளனர். அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்.

” சில பிள்ளைகள் தமது பெற்றோரை வீதிகளில் விட்டுள்ளனர். இது தொடர்பில் அவர்களுடன் பேசுவோம். நிலைமையை தெளிவுபடுத்தி, மீள அழைத்து செல்லுமாறு கோருவோம். அவ்வாறு அழைத்துச்செல்லாதவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வீதிகளில் அநாதரவாக உள்ள சிலர் தமது பிள்ளைகள் மற்றும் பாதுகாவலர்களிடம் செல்வதற்கு விரும்புவதில்லை. சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அத்தகையவர்களை சமூக நலன்புரி திணைக்களத்திடம் ஒப்படைத்து, உரிய ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும்.

அதேவேளை, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்தி சிலர் மக்களிடம் பணம் பெறுகின்றனர். அவர்களுக்கு சிறு தொகை வழங்கப்படுகின்றது. இது வியாபாரமாகவே நடக்கின்றது. அத்தகையவர்கள் தொடர்பான தகவல்கள் புலனாய்வு பிரிவு ஊடாக திரட்டப்பட்டுள்ளன. எனவே, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – எனவும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles