முன்னாள் எம்.பிக்கள் இழப்பீடு பெற்ற விதம் குறித்து விசாரணை!

அறகலயவின்போது ஏற்பட்ட இழப்புகளுக்காக இழப்பீடு பெற்றுக்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது என தெரியவருகின்றது.

அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, போலியான தகவல்களையும் உள்ளடக்கி சிலர் கூடுதலான இழப்பீட்டை பெற்றுக்கொண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் இழர் காப்புறுதி நிறுவனங்களிடமும் இழப்பீடு பெற்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

எனவே, இழப்பீடு முறையாக பெறப்பட்டுள்ளதா என்பது பற்றியும், முறைகேடு இடம்பெற்றிருந்தால் மேலதிகமாக பெற்றுள்ள தொகையை மீளப்பெறுவதற்கான இயலுமை பற்றியும் ஆராயப்பட்டுவருகின்றது என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles