முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய இராணுவ பாதுகாப்பை நீக்குவதால் நாட்டில் பொருளாதாரத்துக்கு நன்மையேதும் ஏற்படப்போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இது விடயத்தில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. நாட்டில் பாதுகாப்பு தொடர்பில் நிறுவனங்கள் உள்ளன. அந்நிறுவனங்களிடம் பாதுகாப்பு உத்தரவாதத்தை பெற்ற பிறகு முடிவை எடுத்திருந்தால் நல்லது.
இராணுவத்தை நீக்குவதால் அவர்கள் வீடுகளுக்கு போகப்போவதில்லை. முகாம்களில் இருப்பார்கள். சம்பளம் வழங்கப்படும். எனவே, இராணுவத்தை நீக்குவதால் நாட்டின் பொருளாதாரத்துக்கு நன்மையேதும் ஏற்படாது. எனவே, முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய இராணுவ பாதுகாப்பை நீக்குவது எமக்கு பிரச்சினை கிடையாது.” – என்றார்.
