IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 47 ஆவது லீக் ஆட்டத்தில் Mumbai Indians மற்றும் Lucknow Super Giants ஆகிய அணிகள் மோதுகின்றன.
இன்றிரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும்.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துள்ள மும்பை அணி எஞ்சியுள்ள ஆட்டங்களில் கணிசமான வெற்றியை பெற்று கௌரவமான முறையில் தொடரை நிறைவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ரிஷப்பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சீசனில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தவில்லை.
அந்த அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
அந்த அணி இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும்.
