தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைப் பதவியில் இருந்து மனோ கணேசன் விலகமாட்டார் என தான் நம்புவதாக கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகவுள்ளதாக மனோ கணேசன் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக்குள் இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வே.இராதாகிருஸ்ணனின்டம் குருவி தொடர்புகொண்டுகேட்டபோது, தலைவர் மனோ, எதற்காக இப்படியொரு முடிவு எடுத்தார் என்பது குழம்பமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இது கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடு அல்ல என்றும் செயலாளருக்கும், தலைவருக்கும் இடையிலான எழுத்து முரண்பாடு என்றும் குறிப்பிட்டார். இதனைவிட, அனைத்து அரசியல் கட்சிகளுக்குள்ளும் முரண்பாடுகள் இருப்பதும், அவற்றைத் தீர்த்துக் கொள்வதும் வழமையானது என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், வரும் 3ஆம் திகதி தமிழ் முற்போக்குக் கூடி, இதுகுறித்து ஆராயும் என்றும் அவர் தெரிவித்தார்.
அனைத்துக் கட்சி அரசாங்கத்தை தாபிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அனைவருக்கும், ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதம் தனக்கும் கிடைத்துள்ளதாகவும், கூட்டணியாக இதுகுறித்தும் வரும் 3ஆம் திகதி ஆராய்ந்து முடிவெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
