” தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்குதான் முதலாளிமார் சம்மேளனத்துடன் ‘டீல்’ இருக்கின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிச்சயம் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கும் யோசனை வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வேலுகுமார், இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் விமர்சிக்கின்றனர். நல்லாட்சியின்போது அவர்களால் ஏன் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கமுடியாமல்போனது?
ஒரு உறுப்பினர் பெற்றோல் கேனுடன் வந்தார். ஆனால் இனி பெற்றோல் கொண்டுவரவேண்டியதில்லை. முதலாளிமார் சம்மேளனத்தின் இணக்கம் தேவையில்லை. நாம் சம்பள உயர்வை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். முற்போக்கு கூட்டணியினருக்குதான் முதலாளிமார்களுடன் ‘டீல்’ உள்ளது.” – என்றார்.