முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க ஈரோஸ் ஜனநாயக முன்னணி தீர்மானம்!

பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பதற்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி தீர்மானித்துள்ளது என்று முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்தார்.

ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” நடைபெறவுள்ள பொதுத்தேர்தலானது தமிழ் மக்களுக்கு முக்கியத்துவமிக்க ஒன்றாகும். அந்தவகையில் மலையக மக்களின் அடிமை சின்னமான லயத்து வீட்டுமுறை முற்றாக ஒழிக்கப்பட்டு, அனைவரும் நிலவுரிமை பெற்றவர்களாக வாழவேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்தே தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எமது ஆதரவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.
தமிழ் முற்போக்கு கூட்டணியானது கடந்த காலங்களில் சில திருப்திகரமான சேவைகளை செய்துள்ளது. அதிலும் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபை சட்டத்தில் திருத்தம், அதிகார சபை உருவாக்கம், தனி வீடு, காணி உரிமை ஆகிய விடயங்களும் செய்யப்பட்டுள்ளன.
இவற்றை அடிப்படையாகக்கொண்டு எதிர்காலத்தில் உரிமைசார் அரசியலையும், அபிவிருத்திசார் அரசியலையும் முன்நோக்கி கொண்டுச்செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியானது, மூன்று வெவ்வேறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் பிராந்தியங்களில் அரசியல் செய்துவருகின்றது. தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் அந்தந்த பிராந்தியக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு, கிழக்கிலுள்ள பிராந்தியக்குழுக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மலையகத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க முடிவெடுக்கப்பட்டது.” – என்றார்.
க.கிசாந்தன்
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles