‘மூடப்பட்ட தேயிலை தொழிற்சாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்ற நடவடிக்கை’

பெருந்தோட்ட பகுதிகளில் மூடப்பட்டுள்ள தோட்ட தொழிற்சாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரும் இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிவேயே அவர் இதனை கூறினார்,

அவர் மேலும் தெரிவித்ததாவது,

‘ கொரோனாவை கண்டு பயப்படுவதே எமக்குள்ள பலவீனம். அந்த பயத்தை ஒழித்தால் அதனை கட்டுப்படுத்த முடியும். மறுபக்கத்தில் மலையக மக்கள் உள்ளிட்ட அனைவரும் சுகாதார வழி முறைகளை உரியவாறு கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

தேயிலை தோட்டங்களில் உற்பத்தியை அதிகரித்தால் மாத்திரமே சம்பள உயர்வை வழங்க முடியும். அதற்காக இரண்டு கைகளை மாத்திரம் கொண்டுள்ள தொழிலாளி ஒருவருக்கு முடியுமான அளவே பறிக்க முடியும்.

30 ஆம் திகதி மேலதிக கொழுந்து பறித்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகின்றேன்.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளி பணிக்கு செல்ல முடியாது. மாகாண சபை தேர்தல் தொடர்பில் அடுத்த மாதமளவில் ஏற்கனவே உள்ள தேர்தல் முறைமைக்கு அமைய ஒரு அறிக்கையை தயார் செய்து சமர்பிக்க எதிர்பார்க்கின்றோம்.

இந்த வருட முடிவுக்குள் அந்த அறிக்கையை சமர்பிக்கவுள்ளோம். அடுத்தது கொரோனாவால் பாதிக்கப்படட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகின்றது. தேசிய வேலை திட்டத்திற்கு அமைய செயற்பட்டு வருகின்றோம்’ என்றார்.

க.கிசாந்தன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles