மூன்று வயது ஆண் குழந்தை
பஸ் மோதி பரிதாப மரணம்!
– மட்டு. ஆரையம்பதியில் துயரம்
மட்டக்களப்பு, ஆரையம்பதி – காளிகோவில் வீதியில் பஸ் மோதி 3 வயது ஆண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்வதற்காக பஸ்ஸில் ஏற முற்பட்ட தாய்க்குப் பின்னால் சென்ற ஆண் குழந்தை மீதே பஸ் மோதியுள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரையம்பதி, முதலாம் பிரிவு, காளிகோவில் வீதியைச் சேர்ந்த பிரகாஷ் றிகோஸ்வரன் (வயது 3) என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது
சடலத்தை ஆரையம்பதி வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், பஸ் சாரதியைக் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடிப் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.