‘மெகா’ அரசியல் கூட்டணி குறித்து அடுத்த வாரம் பேச்சு!

ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் டலஸ் அணியுடன் அடுத்த வாரம் பேச்சு நடத்தப்படும் – என்று உத்தர லங்கா சபாகயவின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நாட்டுக்கு அவசியமான அரசியல் கூட்டணியொன்றை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இதற்கான நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு கவிழ்வதற்கு தாங்கள் சூழ்ச்சி செய்யவில்லை எனவும், பஸிலே அதற்கான சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்தார் எனவும் விமல் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles