மேபீல்ட் தேயிலை தோட்டத்திலிருந்து சிறுத்தையின் சடலம் மீட்பு!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை எல பொஜின் தேசிய உணவகத்திற்கு முன்னால் உள்ள மேபீல்ட் தேயிலை மலையில் 24.02.2021 இன்று  சுமார் இரண்டடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த  சிறுத்தை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சிறுத்தை விஷ உணவு உட் கொண்டு உயிரிழந்துள்ளதா அல்லது எவரேனும் கொன்றுவிட்டனரா? என்பது தொடர்பாக பத்தனை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன் உடலில் காயங்களும் காணப்படுகின்றது.

குறித்த சிறுத்தையின் சடலத்தை நல்லதண்ணி வனஜீவராசிகள் எடுத்து சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles