மேலும் 15 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

உணவுத் தட்டுப்பாடு, தொடர் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் இருந்து மேலும் 15 பேர் இன்று தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் காக்கைதீவைச் சேர்ந்த 15 பேரே இன்று அதிகாலை தனுஷ்கோடி ஊடாக தமிழகம் சென்றுள்ளனர். இவர்களில் சிறார்களும் உள்ளடங்குகின்றனர்.

வரலாற்றில் இல்லாத அளவிற்கு இலங்கையில் மிக மோசமான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. அரசியல் நெருக்கடியும் உச்சம் தொட்டுள்ளது. பொருட்களின் விலைகள் நாளாந்தம் எகிறி வருகின்றது.

இதனால் அண்மைக்காலமாக தமிழகத்துக்கு பலர் அகதிகளாக வருகின்றனர். இதுவரை சுமார் 60 இற்கு மேற்பட்டோர், அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles